
ஆசிய விளையாட்டுப் போட்டியில், தேசிய squash பிரிவில் தங்கப் பதக்கம் வெல்வது, 2028 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான, முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது !
ஆசிய போட்டியில், ஆடவர் மற்றும் மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம் வெல்லும் வீரர்கள், ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவர்.
இந்நிலையில், செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இலக்கு குறித்து, மலேசிய ஸ்குவாஷ் சங்கம், இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
எனினும், வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு, சிறந்த முறையில் தயாராக இருப்பதே முக்கியம் என அதன் இயக்குநர் தெரிவித்தார்.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள S.சிவசங்கரி, 18-வது இடத்தில் உள்ள, Ng Eain Yow ஆகியோர், முறையே மகளிர் மற்றும் ஆடவருக்கான பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
இதனால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்களது பட்டங்களை தக்கவைத்து, 2028 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியைப் பெறும் முன்னணி வீரர்களாக, அவ்விருவரும் கருதப்படுகின்றனர்.
---------
கொரிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில், சில தேசிய பிரதிநிதிகள், காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்
கலப்பு இரட்டையர்களான Jimmy Wong - Cheng Su Yin, Chen Tang Jie - Clarissa San ஆகியோர், காலிறுதியில் நுழைந்தனர்.
அதே வேளை, ஆடவர் ஒற்றையர் Cheam June Wei, சீன நாட்டு வீரரை தோற்கடித்து, அச்சுற்றுக்கு முன்னேறினார்.
---------
20 வயதுக்குட்பட்டோருக்கான, உலக தடகளப் போட்டியில், 19 வயதுடைய தேசிய ஓட்டப்பந்தய வீரர் Danish Iftikhar Muhammad Roslee, ஆடவருக்கான 100 மீட்டர் பிரிவில், இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் !
தகுதிச் சுற்றில், தனது பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த Danish , உலகின் சிறந்த 9 இளம் ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.