
SUKMA விளையாட்டுப் போட்டியில், Selangor, உபசரணை மாநிலமாக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த வெற்றிப் பட்டத்தை வெல்லும் முக்கிய அணியாகவும், தன்னை நிலைநிறுத்தியுள்ளது !
3x3 கூடைப்பந்து விளையாட்டில், ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும், சிலாங்கூர், தங்கப் பதக்கங்களை வென்றது.
மகளிர் இறுதியாட்டத்தில், சிலாங்கூர் அணி, கூட்டரசு பிரதேச அணியை வீழ்த்தி, இம்முறை SUKMA-வில் Selangor-க்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது.
ஆடவர் இறுதியாட்டத்திலும், Selangor அணி, கூட்டரசு பிரதேசத்தை வீழ்த்தி, இரண்டாவது தங்கத்தை கைப்பற்றியது.
2024 Sarawak SUKMA-விலும், சிலாங்கூர், இதேபோல் 3x3 கூடைப்பந்து விளையாட்டில், இரு தங்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிலாங்கூர், 5x5 மற்றும் 3x3 கூடைப்பந்து விளையாட்டின் ஆடவர், மகளிர் பிரிவுகளில் வழங்கப்பட்ட, 4 தங்கப் பதக்கங்களையும் Selangor வென்றிருந்தது.
SUKMA Selangor 2026 போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி Shah Alam, Dataran Kemerdekaan-ல் நடைபெறவுள்ளது.
--------
Marcus Rashford, Manchester United-டில் தொடர்ந்து நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது !
United தலைமை பயிற்றுநர் Michael Carrick அதனை சூசகமாகக் கூறியுள்ளார்.
அண்மைய பருவத்தில், இரவலுக்காக Barcelona-வுக்காக விளையாடிய அவர், அனைத்து போட்டிகளில், 49 ஆட்டங்களில், 14 கோல்கள் போட்டதுமில்லாமல், 14 முறை கோல் போடவும் உதவியுள்ளார்.
எனினும், அவரை நிரந்தரமாக ஒப்பந்தம் செய்வது குறித்து Barcelona எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.
இதனால், மீண்டும் யுனைடட்டுக்கே திரும்பியுள்ள Rashford, நல்ல மனநிலையில் இருப்பதாக Carrick சொன்னார்.
கடந்த 2, 3 நாட்களாக, Rashford பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அனைத்தும் சுமூகமாகச்சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
--------
Bradley Barcola-வை Liverpool-லுக்குக் கொண்டுவரும் முயற்சிக்கு, சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது !
Aston Villa-வுக்கு எதிரான, சுப்பர் கிண்ண இறுதியாட்டத்தில் அவர் களமிறங்கவில்லையாம்.
அதுவே Barcola-வை ஒப்பந்தம் செய்ய தவிக்கும் Liverpool-லின் முயற்சிக்கு, சாதகமாக பார்க்கப்படுகிறது.
தற்போதைய, ஆட்டக்காரர்களை வாங்கும் விற்கும் தவணையில், அவரை எப்படியாவது ஒப்பந்தம் செய்தாக வேண்டும் என, லிவர்பூல் பெரிய குறிக்கோளோடு உள்ளது.
---------
Tottenham கேப்டன் Cristian Romero-வை ஒப்பந்தம் செய்ய, Atletico Madrid, அவ்வணியுடன் உடன்பாடு எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது !