Skip to main content

Advertisement

தலை சுற்றலில் MU நிர்வாகி Carrick !

 

Manchester United-டின் நிர்வாகத்தை, வீரர் Lisandro Martinez விமர்சித்துள்ள நிலையில், அது குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்ட பிறகே முடிவெடுக்கப்படும் என, பயிற்றுநர் Michael Carrick தெரிவித்துள்ளார் !

ஆட்டக்காரர்களை வாங்கும் விற்கும் தவணையில், அணிக்குத் தேவையான வீரர்களை வாங்குவதில், நிர்வாகம் போதிய முதலீடு செய்யவில்லை.

எனவே, அணியின் தற்போதைய மோசமான தொடக்கத்துக்கு, பயிற்றுநர் Carrick-கை மட்டும் குறை கூறுவது தவறு என Martinez குற்றஞ்சாட்டியிருந்தார்.

எனினும், Martinez-சின் பேட்டியைத் தாம் இன்னும் பார்க்கவில்லை என்றும், ஆட்டத்தின் ஏமாற்றத்தால் அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம் என்றும் Carrick குறிப்பிட்டார்.

இதனிடையே, அணியின் வெற்றிப் பாதைக்குத் திரும்ப, வீரர்களின் ஒற்றுமையிலும் முயற்சியிலும், தமக்கு நம்பிக்கை இருப்பதாகக் Carrick சொன்னார்.

இன்று அதிகாலையில் நடைபெற்ற Champions லீக் ஆட்டத்தில், Manchester United 0-2 என Atletico Madrid-டிடம் தோல்வியுற்றது.

---------

மேலும் சில ஆட்டங்களின் முடிவுகள் !

Arsenal 3-0 என  Lille-லை வீழ்த்தியது.

Barcelona 4-1 என Galatasaray-யை வீழ்த்தியது.  

Napoli 1-3 என Villarreal-லிடம் தோற்றது.  

RB Leipzig 1-0 என, PSV-யை வீழ்த்தியது.  

--------

நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள, தேசிய ஆடவர் இரட்டையர் பூப்பந்து ஜோடியான Aaron Chia-Soh Wooi Yik, டென்மார்க் பொது பூப்பந்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளனர் !

அவர்கள், முதல் சுற்றில், ஜப்பானிய இணையை வீழ்த்தி, 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

இவ்வேளையில், இன்று, முதல் சுற்றில், தேசிய ஆடவர் இரட்டையர்களான, Mohd Azriyn Ayub - Tan Wee Kiong-கும், Goh Sze Fei - Nur Izzuddin-னும், நேருக்கு நேர் மோதுகின்றனர்.

டென்மார்க் பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, பிற்பகல் 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

--------

ACL Elite காற்பந்தாட்டத்தில், JDT 2-0 என, கொரிய அணியான Pohang Steelers-சை வீழ்த்தியது ! 

RAAGA Aaha Siranta Isai!