Skip to main content

Advertisement

தொடர்ந்து கால்பந்து விளையாடுவேன் ; Jamal Musiala !

 

மருத்துவ அனுமதி கிடைத்தால், தொடர்ந்து கால்பந்து விளையாடப் போவதாக, Bayern Munich வீரர் Jamal Musiala தெரிவித்திருக்கின்றார் !

நான்கு நாட்களுக்குள், இரண்டு முறை திடலில் மயங்கி விழுந்த சம்பவங்களுக்குப் பிறகு, தனக்கு ஏற்பட்டுள்ள நரம்பியல் செயலிழைவு குறித்து, மனம் திறந்து பேசிய அவர், அவ்வாறு சொன்னார்.

இந்நிலை காரணமாக, தனக்கு குறுகிய நேரத்திற்கு ஏற்படும் absence seizures எனப்படும் வலிப்பு போன்ற பாதிப்புகள் இருப்பதாகவும், அதற்கு எளிதில் சிகிச்சை அளிக்க முடியும் என்றும், அந்த மத்தியதிடலாட்டக்காரர் சொன்னார்.

கடந்த பருவத்தின் முதல் ஆறு மாதங்களில், கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கணுக்கால் முறிவு காரணமாக, Musiala விளையாட முடியாமல் இருந்தார்.

பின்னர் பருவத்தின் இரண்டாம் பாதியில் மீண்டும் களமிறங்கிய அவர், 2026 கால்பந்து திருவிழாவில், ஜெர்மனி அணிக்காகவும் விளையாடினார்.

----------

Julian Alvarez, இவ்வாண்டு அணியை விட்டு வெளியேற மாட்டார் என Atletico Madrid பயிற்றுநர் Diego Simeone மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் !

Alvarez-சை மையமாகக் கொண்டு அணியை உருவாக்க விரும்புவதாகவும் Simeone கூறினார்.

26 வயதான அவர், ஆர்செனலுக்குச் செல்லக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின.

கடந்த ஜூன் மாதம் ரியல் மாட்ரிட் முன்வைத்த 150 மில்லியன் யூரோ தொகையிலான விண்ணப்பத்தையும், Atletico Madrid நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-----------

உலகப் பூப்பந்து போட்டியில், தேசிய மகளிர் இரட்டையர் Pearly Tan - M.Thinaah, 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் !

அவர்கள், இரண்டாவது சுற்றில் துருக்கியே ஜோடியை தோற்கடித்து, அச்சுற்றில் நுழைந்தனர்.

கலப்பு இரட்டையர் Goh Soon Huat - Shevon Lai-யும், அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

உலகப் பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும், கண்டு களிக்கலாம்.

----------

உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில், தேசிய அணி, நாளை காலை, இணை உபசரணை நாடான பெல்ஜியத்தை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அவ்வாட்டத்திலும், தமதணி, உயர்மட்ட ஆட்டத்தைத் தொடர வேண்டும் என, அதன் தலைமைப் பயிற்றுநர் வலியுறுத்தியுள்ளார் !

2-ஆவது குழுநிலை ஆட்டத்தில், Speedy Tigers, 3-3 என France-சுடன் சமநிலை கண்டதை அடுத்து, அவர் அவ்வாறு கூறினார்.

Speedy Tigers - Belgium மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை மணி 2.30 தொடங்கி, Astro அலைவரிசை 806-றில் கண்டு களிக்கலாம்.

RAAGA Aaha Siranta Isai!