Skip to main content

Advertisement

Tchouameni-யை தக்கவைக்கும் Real; MU-க்கு அதிர்ச்சி !

 

Aurelien Tchouameni-யை ஒப்பந்தம் செய்ய Manchester United மேற்கொண்டு வந்த நீண்டகால முயற்சி, முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது !

France நட்சத்திர வீரரான அவர், Real Madrid-டுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதித்துள்ளதாகக் கூறப்படுவதே அதற்குக் காரணம்.

இந்த ஆட்டக்காரர்களை வாங்கும், விற்கும் தவணையில், அந்த வீரரை தமதணிக்குக் கொண்டு வருவதையே United முக்கிய இலக்காக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

---------

Manchester City-யை வழிநடத்துவதே, கால்பந்து உலகில் தனக்குக் கிடைத்த சிறந்த பொறுப்பு என, அதன் புதிய தலைமைப் பயிற்றுநர் Enzo Maresca தெரிவித்துள்ளார் !

City வெற்றிகளைப் பெறுவதும், பட்டங்களை வெல்வதும் மட்டுமின்றி, ஒவ்வொரு பருவத்திலும் முன்னேற்றம் காண்பதே மிகவும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

நீண்ட காலமாக City-யின் தலைமைப் பயிற்றுநராக இருந்த Pep Guardiola-வுக்குப் பதிலாக, Maresca தற்போது புதிய பயிற்றுநராக பொறுப்பேற்றார்.

----------

Arsenal வீரர்களான, Gabriel Jesus , Gabriel Martinelli ஆகியோர் மீது, Serie A கிளப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன !

Napoli, Gabriel Jesus-சுக்காக அடிபோட்டு வரும் வேளை, AS Roma, Martinelli-யை வளைத்துப்போட முயற்சிக்கின்றது.

RAAGA Aaha Siranta Isai!