Skip to main content

Advertisement

Tee Kai Wun, புதிய ஜோடியுடன் சேர தயார் !

 

 

தேசிய பூப்பந்து ஆடவர் இரட்டையர் வீரர் Tee Kai Wun, எந்த வீரருடன் இணைந்து விளையாடவும் தாம் எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் !

தேசிய அணியின் நலனையும், அனைத்துலக அரங்கில் மலேசியாவின் வெற்றிப் பயணத்தையும் முன்னிறுத்தி, எந்த முடிவையும் ஏற்று, அதற்கேற்ப தம்மைத் தயார்படுத்திக் கொள்ளத் தயார் என அவர் கூறினார்.

கடந்த வாரம், Kai Wun-னை Man Wei Chong-கிடமிருந்து பிரித்து, Aaron Chia-வுடன் இணைக்க, மலேசிய பூப்பந்து சங்கம் முடிவு செய்தது.

இந்த மாற்றம், 2028-ஆம் ஆண்டு Los Angeles Olympic போட்டியை முன்னிட்டு, ஆடவர் இரட்டையர் பிரிவை மேலும் வலுப்படுத்தும் பயிற்றுநர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

---------

தேசிய ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia, ஆஸ்திரேலிய பொது பூப்பந்து போட்டியில், இரண்டு தகுதிச் சுற்று ஆட்டங்களிலும் வென்று, முதல் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் !

---------

டென்மார்க் தேசிய காற்பந்து வீரர் Christian Eriksen, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்விட்டார் !

தற்போது அவர் தனது குடும்பத்தாருடன் வீட்டில் இருந்து, குணமடைந்து வருகிறார்.

Ukraine-னுக்கு எதிரான அண்மைய அனைத்துலக நட்புமுறை காற்பந்தாட்டத்தின் போது, திடீரென திடலில் சுருண்டு விழுந்த Eriksen, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார்.

----------

Jurrien Timber, 2026 காற்பந்து திருவிழாவில் களமிறங்கப்போவதில்லை !

அவர் காயப் பிரச்சனையில் இருப்பதை, நெதெர்லாந்து தேசிய அணி உறுதிப்படுத்தியது.

----------

Matheus Fernandes-சுக்கு 85 மில்லியன் பவுண்ட் விலையை நிர்ணயித்துள்ளதாம் West Ham !

அவரை வளைத்துப்போட, Manchester United உட்பட மேலும் சில கிளப்புகள் அடிப்போட்டு வருவதை அறிந்த West Ham, அவ்விலையை நிர்ணயித்தது.

RAAGA Aaha Siranta Isai!