Skip to main content

Advertisement

Tottenham-மை விட்டுச் செல்கிறார் Cristian Romero !

 

 

கேப்டன் Cristian Romero, Tottenham-மை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார் !

Spurs ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அந்த Argentina வீரர், கிளப்பின் 17 ஆண்டுகால கிண்ண வறட்சிக்கு முடிவுகட்ட உதவியதில், பெருமை கொள்வதாகக் கூறி, மனதை நெகிழச் செய்யும் பிரியாவிடை பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர், 34 மில்லியன் பவுண்ட் தொகை மதிப்பிலான ஒப்பந்தத்தில், Atletico Madrid-டுக்குச் செல்லவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

-----------

தனது எதிர்காலம் குறித்து ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என, Premier லீக் வெற்றியாளரான Arsenal-லின் நிர்வாகி Mikel Arteta தெரிவித்துள்ளார் !

தனது ஒப்பந்தம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ள நிலையில், Arsenal-லுடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதில், தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என Arteta கூறியுள்ளார்.

---------

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு தான், தனது 2028 ஒலிம்பிக் பற்றிய எதிர்காலம் குறித்து முடிவு செய்யவுள்ளதாக, தேசிய உள்ளரங்கு சைக்கிளோட்ட வீரர் Datuk Mohd Azizulhasni Awang, தெரிவித்துள்ளார் !

இந்நிலையில், அப்போட்டியில் பங்கேற்பதற்கான தனது முயற்சிக்கு, ஆதரவு கிடைத்து வருவதாக அவர் கூறினார்.

----------

சுக்மா விளையாட்டுப் போட்டி, இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது !

அப்போட்டியின் தொடக்க விழாவை, இன்றிரவு 8 மணி தொடங்கி, Astro அலைவரிசை 801-றில், நேரலையாகக் காணலாம்.

RAAGA Aaha Siranta Isai!