
2026 காற்பந்து திருவிழா குறித்த செய்திகளைக் காண்போம் !
Roberto Martínez பயிற்றுவிக்கும் போர்ச்சுகல், உலக மகுடத்தை வெற்றிக் கொள்ளும் முனைப்புடன், நாளை Croatia-வைச் சந்திக்கிறது !
இந்த ஆட்டம், Luka Modrić அல்லது Cristiano Ronaldo ஆகியோரில் ஒருவருக்கு, காற்பந்து திருவிழாவின் கடைசி ஆட்டமாக அமையக்கூடும் என்பதால், இந்த Kncok out மோதல், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்றாலும், Toronto-வில் ஈரப்பதம் காரணமாக வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் வரை உணரப்படலாம் எனக் கூறப்படுவதால், ஆட்டக்காரர்களின் உடல் தகுதி குறித்து கவலை எழுந்துள்ளது.
ஆனால், அந்த சவாலை இரு அணிகளும் பொருட்படுத்தாமல், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வேட்கையுடன் களமிறங்குகின்றன.
--------
மற்றோர் ஆட்டத்தில், அதிகாலை Spain, Austria-வைச் சந்திக்கிறது.
இதுவரை ஒரு கோல்கூட கோட்டை விடாமல் தோல்வியின்றி விளையாடி வரும் Spain-னுக்காக, நட்சத்திரம் Lamine Yamal களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு பக்கம், David Alaba உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்கள் விளையாடும் Austria, நாளை வெற்றி பெறும் என நம்புவதாக, அதன் பயிற்றுநர் Ralf Rangnick தெரிவித்துள்ளார்.
---------
ஒரு சோதனை முயற்சியாக, இரட்டையர்களைத் தற்காலிகமாக பிரித்து விட மலேசிய பூப்பந்து சங்கம் எடுத்துள்ள முடிவை, ஆடவர் இரட்டையர் Aaron Chia - Soh Wooi Yik ஏற்றுக்கொண்டுள்ளனர் !
இந்த மாற்றத்தை சிறப்பாகப் பயன்படுத்தி, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உறுதியாக இருப்பதாக, அவ்விருவரும் தெரிவித்தனர்.
---------
கனடிய பொது பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia, இன்று இரண்டாவது சுற்றில் களமிறங்குகின்றார் !
அவர், தைவானிய வீரருடன் மோதுகிறார்.