Skip to main content

Advertisement

உலகக் கிண்ண போட்டியை மீண்டும் தவறவிட்டது இத்தாலி!

தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் விளையாடும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது இத்தாலி! 

இன்று காலை நடைபெற்ற யுரோப்பிய கண்டத்திற்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் அவ்வணி Bosnia- Herzegovinaவிடம் 1-4 என பெனால்டியில் வீழ்ந்தது. 

1-1 என ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் அந்த பொனால்டி வழங்கப்பட்டது. 

மற்ற ஆட்டங்களில் செக் குடியரசு டென்மார்க்குடன் 2-2 என சமநிலை கண்டு, பின்னர் பெனால்டியில் 3-1 என வெற்றிப் பெற்றது. 

Sweden 3-2 என போலந்தை வென்றது. 

துருக்கியே Kosovoவை 1-0 என தோற்கடித்து  24 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கிண்ண போட்டிக்குத் தகுதிப் பெற்றது. 

-- 

இதனிடையே ஜப்பானுடனான அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் இங்கிலாந்து 0-1 என வீழ்ந்தது. 

-- 

ஆசிய கிண்ண கால்பந்து போட்டி் தகுதிச் சுற்றின் கடைசி குழு நிலை ஆட்டத்தில் வியட்னாம் மலேசியாவை 3-1 என வீழ்த்தியது. 

--

Tottenhamமின் புதிய நிர்வாகியாக Brighton முன்னாள் நிர்வாகி Roberto De Zerbi நியமிக்கப்பட்டுள்ளார். 

RAAGA Aaha Siranta Isai!