Skip to main content

Advertisement

உலகப் போட்டியில், Danish 8-ஆவது இடத்தைப் பிடித்தார் !

 

20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டியில், 100 மீட்டர் பிரிவின் இறுதிச் சுற்றை, தேசிய ஓட்டப்பந்தய வீரர் Danish Iftikhar Muhammad Roslee, 10.44 விநாடிகளில் ஓடி, நிறைவுச் செய்துள்ளார் !

இதையடுத்து, 19 வயதான அவர் 8-ஆவது இடத்தைப் பிடித்தார்.

அப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இரண்டாவது மலேசிய ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையையும் Danish பெற்றார்.

2022-ஆம் ஆண்டில், 100 மீட்டர் பிரிவில், இறுதிச் சுற்றுக்குத் தகுதியான Muhammad Azeem Mohd Fahmi, முதல் தேசிய வீரரானார்.

----------

கொரிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் இரட்டையர் Tee Kai Wun - Yap Roy King, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !

அவர்கள், காலிறுதியில், சகநாட்டு ஜோடியான Aaron Chia - Aaron Tai-யை வீழ்த்தி அச்சுற்றில் நுழைந்தனர்.

கலப்பு இரட்டையர்களான Chen Tang Jie - Clarissa San, Jimmy Wong - Cheng Su Yin ஆகியோர், காலிறுதியோடு தங்களின் பயணத்தை முடித்துக்கொண்டனர்.

---------

தன்னை ஒப்பந்தம் செய்வது குறித்து, Manchester City-யுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க, Rodri, Barcelona-வுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது !

சிட்டியில் விளையாடி வரும் அந்த மத்தியதிடலாட்டக்காரரான Rodri-யின் சம்மதம் கிடைத்துள்ளதால், அக்கிளப்புடன் பேச்சுவார்த்தையை தொடங்க முடியும் என Barca சொன்னது.

அதே வேளை, Rodri-யை ஒப்பந்தம் செய்ய Real Madrid-டும் ஆர்வம் காட்டி வருகின்றது. 

RAAGA Aaha Siranta Isai!