
அமெரிக்க தேசிய கால்பந்து அணியில் தொடர்ந்து நீடிக்கின்றார், அதன் தலைமை பயிற்றுநர் Mauricio Pochettino !
2030-ஆம் ஆண்டு காற்பந்து திருவிழா வரைக்குமான ஒப்பந்த நீட்டிப்பில், Pochettino கையெழுத்திட்டுள்ளார்.
இந்த ஒப்பந்த நீட்டிப்பு குறித்து, அமெரிக்க கால்பந்து சம்மேளனம் அறிவித்தது.
54 வயதான Pochettino, 2024-ஆம் ஆண்டு அமெரிக்க அணியின் பயிற்றுநராக பொறுப்பேற்றார்.
அண்மையில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்திய கால்பந்து திருவிழாவில், US அணி, 16 அணிகள் மோதும் சுற்றுக்கு முன்னேறியது.
---------
Manchester United வீரர் Marcus Rashford-டை, துருக்கியேவுக்கு அழைத்து வர, Fenerbahce, மிகப்பெரிய தொகையை செலவிடத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது !
அந்த தாக்குதல் ஆட்டக்காரர், கடந்த பருவம் முழுவதும், Barcelona-வுக்காக இரவலில் விளையாடி வந்தார்.
---------
இந்தியாவில் நடைபெறவுள்ள, உலக பூப்பந்து போட்டியில் பங்கேற்கவிருந்த, தனது இரண்டு கலப்பு இரட்டையர் ஜோடிகளை, இந்தோனேசிய பூப்பந்து சங்கம் நீக்கியுள்ளது !
ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில், உலக பூப்பந்து சம்மேளனம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக போட்டிகளில் வீரர்களின் பங்கேற்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும், விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப நடைபெறுவதை உறுதி செய்ய, இம்முடிவு எடுக்கப்பட்டதாக அச்சங்கம் கூறியது.