
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை என்பது, வீடு, பயிற்சி, போட்டி என தொடர்ந்து பயணிக்கும் ஒன்று !
அந்த வகையில், பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில், ஆசிய விளையாட்டுப் போட்டியில், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது வீரர்கள் பதக்கம் வென்றிருப்பது, சாதாரணமான சாதனை அல்ல என, தேசிய கராத்தே தலைமை பயிற்றுநர் R.ஷர்மேந்திரன் தெர்திவித்துள்ளார்.
இந்நிலையில், தங்கம் வெல்லும் கராத்தே வீரர்களுக்கு கார், பரிசாக வழங்கப்படும் எனும் அறிவிப்பு, தனது வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் கொடுத்ததாக அவர் கூறினார்.
அப்போட்டிக்கு, ஒரே ஒரு பதக்க இலக்கோடு சென்ற தேசிய கராதே அணி, 2 தங்கம், 3 வெண்கலப் பதக்கங்களை வென்று, போட்டியை நிறைவுச் செய்தது.
இவ்வேளையில், இன்று அதிகாலை 1 மணி வாக்கில், ஜப்பானில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த கராத்தே வீரர்களுக்கு, உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
---------
இதனிடையே, தேசிய Sepak Takraw ரெகு குழு பிரிவின் 36 ஆண்டுகளாக நீடித்திருந்த வெற்றி வறட்சி, ஒரு முடிவுக்கு வந்துள்ளது !
சற்று முன்னர் நடந்த இறுதியாட்டத்தில், பரம வைரியான தாய்லாந்தை, அவ்வணி 2-0 என வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
இவ்வேளையில், தமதணி வெளிப்படுத்திய ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும், அவர்கள் ஆடிய விதம் தமக்கு திருப்தியளிப்பதாகவும், தேசிய ஆடவர் Sepak Takraw அணி நிர்வாகி தெரிவித்துள்ளார்.
----------
மற்றொரு பக்கம், Squash விளையாட்டில், S.சிவசங்கரி மகளிர் ஒற்றையர் பிரிவில், அரையிறுத்யிக்கு முன்னேறியுள்ளார் !
ஆடவர் ஒற்றையர் பிரிவில், Ng Eain Yow-வும் அச்சுற்றில் கால் பதித்தார்.
அவ்விவருமே நடப்பு வெற்றியாளர்களாவர்.