Skip to main content

Advertisement

யுனைடெட்டுக்கு இப்பருவத்துக்கான முதல் வெற்றி !

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தாட்டத்தில், மான்செஸ்டர் யுனைடெட் இப்பருவத்துக்கான முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அது,நேற்றைய ஆட்டத்தில் Ipswich- ஐ 5-2 என வீழ்த்தியது.

ஆரம்பக்கட்டத்தில் இப்ஸ்விச் ஏதோ முன்னிலை பெற்றது.  

ஆனால், முற்பாதி ஆட்டம் முடிவதற்கு 5 நிமிடங்களுக்கு இருக்கு போது, யுனைடெட் கேப்டன் புருனோ பெர்னாண்டஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஆட்டத்தை மீட்டெடுத்தார்.  

பெர்னாண்டஸ் தொடர்ந்து 3 கோல்கள் போட்டு ஹாட்ரிக் சாதனையும் படைத்துள்ளார்.

யுனைடெட்டின் மற்ற கோல்கள் பிரையன் ம்பியூமோ மற்றும் இப்ஸ்விச் அணியின் சொந்த கோல்கள் மூலம் கிடைத்தன.

--

இவ்வேளையில், பிரிமியர் லீக்கின் மற்ற ஆட்டங்களின் முடிவுகள்  

செல்சி Brighton உடனான ஆட்டத்தில் 4-3 என வெற்றிக் கண்டது

Sunderland Fulham - ஐ 1-0 என தோற்கடித்தது.

Leeds Brentford உடன் 1-1 என சமநிலைக் கண்டது.

--

ஆஸ்டன் வில்லா மற்றும் இங்கிலாந்து அணியின் தாக்குதல் ஆட்டக்காரரான Ollie Watkins சவுதி கிளப்பான அல் ஹிலாலில் 50 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

--

மான்செஸ்டர் சிட்டி அணியின் தாக்குதல் வீரர் Jack Grealishஷை இரண்டாவது முறையாக இரவல் ஒப்பந்தத்தில் பெறுவதற்காக எவர்டன் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

--  

RAAGA Aaha Siranta Isai!