Skip to main content

Advertisement

5 தேசிய வீரர்கள் அரையிறுதியில் !

5 தேசிய வீரர்கள் அரையிறுதியில் !

 

மக்காவ் பொது பூப்பந்து போட்டியில், இன்று 5 தேசிய பிரதிநிதிகள், அரையிறுதியில் களம் காண்கின்றனர் !

அதில் ஆடவர் ஒற்றையர் Justin Hoh-வும் அடங்குவார். 

அதே வேளை, ஆடவர் இரட்டையர் arif junaidi - yap roy king, சக நாட்டு ஜோடியான  Choong Hon Jian - Muhammad Haikal Nazri-யுடன் நேருக்கு நேர் மோதுகின்றனர். 

மக்காவ் பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், சூக்காவிலும், நேரலையாகக் காணலாம்.   

------------- 

Manchester United-டின் Rasmus Hojlund-னை வளைத்துப்போட RB Leipzig அடிபோட்டு வருகிறது ! 

Leipzig-கில் இருந்து Benjamin Šeško-வை ஒப்பந்தம் செய்ய யுனைடட் முயற்சிக்கும் நிலையில், அது Hojlund-னின் எதிர்காலத்தை திண்டாட்டத்துக்குள்ளாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. 

அதுவே, Hojlund மீது Leipzig ஆர்வம் காட்டுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 

---------- 

Alexander Isak-க்கு Liverpool அனுப்பிய 110 மில்லியன் பவுண்ட் விலையிலான விண்ணப்பத்தை, Newcastle United நிராகரித்துள்ளது ! 

அவரை வாங்க Newcastle, 150 மில்லியன் பவுண்ட் தொகையைக் கேட்பதாகக் கூறப்படுகிறது. 

RAAGA Aaha Siranta Isai!