
மக்காவ் பொது பூப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் களமிறங்க மூன்று தேசிய பிரதிநிதிகள் தயாராதயாராகிவிட்டனர் !
அதில், ஆடவர் ஒற்றையர் Justin Hoh-வும் அடங்குவார்.
அவர் இறுதிச் சுற்று வரை வந்தது இதுவே முதன் முறையாகும்.
பரபரப்பான இறுதிச் சுற்று ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், சூக்காவிலும் கண்டு களிக்கலாம்.
------------
Tottenham- மின் Son Heung-min, Los Angeles FC-யில் சேர நெருங்கிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது !
இப்பருவ இறுதியோடு தாம் Spurs-சை விட்டு வெளியேறவதாக Son Heung-min, உறுதியாக கூறிவிட்டார்.
அவர் பத்தாண்டுகளாக Spurs-சில் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.
-------------
Rasmus Hojlund-னை 30 மில்லியன் பவுண்ட் தொகையில் விற்க, Manchester United தயாராக உள்ளதாம் !
அவரை விற்றால், RB Leipzig-இன் Benjamin Sesko-வை மாற்றாகக் கொண்டு வர யுனைடட் திட்டமிட்டுள்ளது.
Sesko-வை ஒப்பந்தம் செய்ய, யுனைடட் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
----------
இதனிடையே, யுனைடட்டில் புதிதாக ஒப்பந்தமான Bryan Mbeumo, Everton-னுக்கு எதிரான நாளைய பருவத்துக்கு முந்தைய நட்புமுறை ஆட்டத்தில், முதல் முறையாக களமிறங்குகிறார் !
நிர்வாகி Amorim அதனை உறுதிப்படுத்தினார்.
அண்மையில் Mbeumo, 71 மில்லியன் பவுண்ட் விலையில், யுனைடட்டில் சேர்ந்தார்.