Skip to main content

Advertisement

விரக்தியில் Fernandes !

விரக்தியில் fernandes !

 

Manchester United-டில் ஒட்டுமொத்த மாற்றம் தேவைப்படுகிறது !

Everton-னுக்கு எதிரான 2-2 என சமநிலை கண்ட நட்புமுறை ஆட்டத்தில், தமதணி மந்தமாக இருந்ததை யுனைடட் கேப்டன் Bruno Fernandes சுட்டிக்காட்டினார். 

அந்த மந்த நிலையை உடனடியாக மாற்றியே ஆக வேண்டும் என Fernandes சொன்னார்.

ஆட்டத்தின் போது, வீரர்களின் ஆர்வமும் ஒத்துழைப்பும் குறைந்ததாக, அவர் அதிருப்தி தெரிவித்தார். 

கடந்த காலங்களின் வெற்றிக் கலாசாரத்தை, மீண்டும் மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் சொன்னார். 

--------- 

இதனிடையே, இன்றிரவு Athletic Bilbao-க்கு எதிரான, பருவத்துக்கு முந்தைய நட்புமுறை காற்பந்தாட்டத்தில் Liverpool களமிறங்குகிறது ! 

அவ்வாட்டத்தை, இரவு மணி 11.50 தொடங்கி, Astro அலைவரிசை 811-இலும், சூக்காவிலும் நேரலையாகக் காணலாம். 

---------- 

Chelsea, Christopher Nkunku-வை விற்க தயாராக உள்ளதாம் ! 

அவரை வாங்க Inter Milan ஆவல் கொள்வதாக தெரிகிறது. 

அவரின் ஒப்பந்தம் குறித்து, Milan, Chelsea-யின் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

Chelsea-யுடனான அவரின் ஒப்பந்தம் முடிவடைய இன்னும் நான்காண்டுகள் இருக்கின்றன. 

ஆயினும், அணியில் பெயர் போட முடியாத சூழலில் Chelsea, அவரை விற்பனை செய்ய முனைந்துள்ளது. 

RAAGA Aaha Siranta Isai!