
RB Leipzig-கின் Benjamin Sesko-வை எப்படியாவது ஒப்பந்த செய்துவிட வேண்டும் எனும் குறிக்கோளில் உள்ளது Newcastle !
Newcastle, Sesko-வுக்கான மேம்படுத்தப்பட்ட விண்ணப்பமொன்றை, Leipzig-க்கு அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக Newcastle அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
Liverpool-லுக்கு மாறிச் செல்லலாம் என கூறப்படும் Alexander Isak-க்குக்கு மாற்றாக Sesko விளங்குகிறார்.
---------
Rodrygo, Real Madrid-டிலேயே இருக்க, போராடப்போவதாக தெரிவித்துள்ளார் !
தம்மீது பல கிளப்புகள் ஆர்வம் காட்டி வருவதை அடுத்து, அவர் அவ்வாறு சொன்னார்.
அவரை வளைத்துப்போட அடிபோடும் கிளப்புகளில், Tottenham-மும், Liverpool-லும் அடங்கும்.
--------------
Anfield-டில் நடந்த இரண்டு நட்புமுறை காற்பந்தாட்டங்களில், Liverpool, Athletic Bilbao--வை 4-1 மற்றும் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
கடந்த மாதம் Diogo Jota இறந்த பிறகு, The Reds, Anfield-டில் களமிறங்குவது இதுவே முதல் முறையாகும்.
இவ்வார ஞாயிற்றுக்கிழமை, Community Shield போட்டியில், Liverpool - Crystal Palace-சுடன் மோதுகிறது.
----------
இவ்வாரம் நடைபெறும் Cincinnati தென்னிஸ் போட்டியில் இருந்து, Novak Djokovic விலகிக்கொண்டுள்ளார் !
இம்மாத இறுதியில் நடைபெறும், அமெரிக்க பொது தென்னிஸ் போட்டிக்கு தயாராக ஏதுவாக, அவர் அம்முடிவை எடுத்துள்ளார்.
French பொது தென்னிஸ் போட்டியிலும், Wimbledon தென்னிஸ் போட்டியிலும், அவர் அரையிறுதியிலேயே தோல்வியுற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.