
Manchester City-யில் வேண்டாதவராகி இருக்கும் Jack Grealish-ஷை ஒப்பந்தம் செய்ய, Tottenham ஆர்வமாக இருக்கின்றதாம் !
Spurs-சில் காயப் பிரச்சனையால் நீண்ட காலம் ஓய்வில் போகக்கூடும் என நம்பப்படும் James Maddison-சுக்கு மாற்றாக, Grealish பரிசீலிக்கப்படுகிறார்.
Grealish-ஷின் ஒப்பந்தம் குறித்து, Spurs, City-யைத் தொடர்புக்கொண்டு பேசிவிட்டதாம்.
---------
Newcastle United, Crystal Palace தற்காப்பு ஆட்டக்காரர் Marc Guehi மீதான தனது ஆர்வத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது !
அவருக்கான 40 மில்லியன் பவுண்ட் விலையிலான விண்ணப்பத்தை அனுப்ப Newcastle தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அவரை ஒப்பந்தம் செய்யயும் Newcastle-லின் முயற்சி, தோல்வியில் முடிந்தது.
--------
தேசிய ஆடவர் ஒற்றையர் Justin Hoh, பூப்பந்து உலகத் தரவரிசையில், 8 இடங்கள் முன்னேறி, 37-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இது அவரின் தனிப்பட்ட சாதனையாகும்.
காரணம், இதுவரை இறுதிச் சுற்று வரை சென்றிராத 21 வயதான அவர், மக்காவ் பூப்பந்து போட்டியில் அச்சற்று வரை சென்று சொந்த சாதனையை படைத்தார்.