
இம்மாதம் Gigio Donnarumma-வை விற்கவுள்ளதாம் PSG !
அவர் அவ்வணியுடனான ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட மறுத்ததே அதற்குக் காரணம்.
நாளை மறுநாள் நடைபெறும், Tottenham-முக்கு எதிரான சூப்பர் கிண்ண காற்பந்தாட்டத்திலும், PSG அணியில் அவர் இடம்பெறவில்லை.
Chelsea, Manchester United உட்பட சில பிரிமியர் லீக் கிளப்புகள் அவரின் நிலைமையைக் கண்காணித்து வருகின்றன.
-------------
Manchester United-டின் Alejandro Garnacho மீது Chelsea கடுமையாக ஆர்வம் காட்டி வருகிறது !
அவரை ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில், Chelsea ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
யுனைடட்டின் இன்னொரு வீரரையும், The Blues வளைத்துப்போட அடிப்போடு வருகிறது.
Kobbie Mainoo தான் அந்த ஒரு வீரராவார்.
----------
RB Leipzig-க்கு Christopher Nkunku-வைக் கொடுத்து, அங்கிருந்து Xavi Simons-சை ஒப்பந்தம் செய்ய Chelsea முயற்சிக்கிறது !
அது குறித்து அந்த இது கிளப்புகளும் பேசிக்கொண்டிருக்கின்றனவாம்.
----------
Manchester City, Real Madrid தாக்குதல் ஆட்டக்காரர் Rodrygo-வை ஒப்பந்தம் செய்வது குறித்து பரிசீலிக்கிறது !
----------
இந்த மாத இறுதியில், பாரிசில் நடைபெறும் 2025 உலக பூப்பந்து போட்டிக்கு, தேசிய அணி புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தாய்லாந்தில் நடைபெறும் 2025 சீ விளையாட்டு போட்டிக்கு செல்லும் வீரர்களின் இறுதிப் பட்டியலை, BAM இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.