
உலக பூப்பந்து போட்டியின் விளையாட்டாளர்களின் அட்டவணை வெளியாகிவிட்டது !
அதில் 8 தேசிய இரட்டையர் ஜோடிகள், நேரடியாக இரண்டாவது சுற்றுக்குச் செல்ல தகுதிப் பெற்றிருக்கின்றனர்.
மகளிர் இரட்டையர் Pearly Tan-M. Thinaah, ஆடவர் இரட்டையர்கள் Aaron Chia-Soh Wooi Yik, Goh Sze Fei-Nur Izzuddin ஆகியோர் அதிலடங்குவர்.
இதனிடையே, ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia, முதல் சுற்றில் தென் கொரிய வீரரை சந்திக்கின்றார்.
அதில் வெற்றி பெற்றால் அவர், இரண்டாம் சுற்றில் உலகின் நான்காம் நிலை சீன வீரரைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.
உலக பூப்பந்து போட்டி, இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கி, 31-ஆம் தேதி வரை பாரிசில் நடைபெறுகிறது.
----------
PSG-க்கு எதிரான நாளைய சூப்பர் கிண்ண காற்பந்தாட்டம், Tottenham-முக்கு கொஞ்சம் சவாலாக இருக்கலாம் !
கடந்த மே மாதம் PSG, Inter Milan-னை 5-0 என வீழ்த்தி, முதன் முறையாக Champions லீக் பட்டத்தை வென்றதே அதற்குக் காரணம்.
ஆயினும், தமதணி நாளை மிகுந்த போட்டித்தன்மையுடன் விளையாடும் எனும் நம்பிக்கை தமக்கிருப்பதாக, Spurs-சின் புதிய நிர்வாகி Thomas Frank தெரிவித்தார்.
Spurs நிர்வாகியாகியாக நியமிக்கப்பட்ட Frank-குக்கு, இது முதல் போட்டித்தன்மை மிக்க ஆட்டமாகும்.
அவர் ஜூன் 12-ஆம் தேதி Ange Postecoglou-க்கு மாற்றாக நியமிக்கப்பட்டார்.
PSG - Tottenham மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை மணி 2.50 தொடங்கி, Astro அலைவரிசை 820-இல் நேரலையாகக் காணலாம்.
---------
இதனிடையே, நாளைய PSG-க்கு எதிரான நாளைய ஆட்டத்துக்கு தயாராக ஏதுவாக, Thomas Frank சிறந்த விதமான பயிற்சிகளை வழங்கியிருப்பதாக, Tottenham தற்காப்பு வீரர் Ben Davies தெரிவித்துள்ளார் !
அவர் Spurs-சுக்கு நிர்வாகியாக வந்ததிலிருந்து, அணி முழுக்கவே ஒரு புதிய உற்சாகம் காணப்படுவதாக, Davies சொன்னார்.
---------
Gianluigi Donnarumma, PSG-யை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன !
அந்த கோல் காவலர், Manchester City-யில் சேருவதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெரிகிறது.
City-யும், அந்த வீரருடன் தனிப்பட்ட நிபந்தனைகளுக்கு இணக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.