
அடுத்தாண்டு, சிலாங்கூர் சுக்மா விளையாட்டுப் போட்டியில், சிலம்பம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதை, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியிருக்கிறார் !
இது சுக்மா உச்ச மன்றம் நடத்திய ஆய்வுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முடிவாகும் என அவர் கூறினார்.
Petanque மற்றும் Muaythai ஆகியவையும், அப்போட்டியில் விருப்ப விளையாட்டுகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.
சீ போட்டி, ஆசிய போட்டி, கோமன்வல்த் போட்டி, ஒலிம்பிக் போட்டி போன்ற முக்கிய போட்டிகளில், சிலம்பம் இடம்பெறவில்லை என்பதால், சிலம்பம் சிலாங்கூர் சுக்மாவில் சேர்த்துக்கொள்ளப்படவில்லையென முன்னதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு, சமூகத்தில் பெரும் கண்டனம் கிளம்பியிருந்த நிலையில், தற்போது சிலம்பம் மீண்டும் சுக்மாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
-----------
Tottenham-மில் நிறைய புதிய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவர் என அதன் நிர்வாகி Thomas Frank தெரிவித்துள்ளார் !
இன்று காலை நடந்த சூப்பர் கிண்ண ஆட்டத்தில், Spurs 3-4 என பெனால்டியில் PSG-யிடம் வீழ்ந்ததை அடுத்து, அவர் அவ்வாறு கூறினார்.
அவ்வாட்டத்தில் தமதணி தோல்வி கண்டாலும், தனது வீரர்களை அப்போது வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை நினைத்து தாம் பெருமிதம் கொள்வதாக Frank சொன்னார்.
எனவே, புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து, அணியை இன்னும் பலப்படுத்தப்போவதாக அவர் சொன்னார்.
--------------
RB Leipzig வீரர் Xavi Simons-சை வளைத்துப்போட Manchester City அடிபோட்டு வருகிறது !
அவரை Chelsea-யும், ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.