Skip to main content

Advertisement

புதிய பிரிமியர் லீக்கில் களமிறங்கும் லிவர்பூல் !

புதிய பிரிமியர் லீக்கில் களமிறங்கும் லிவர்பூல் !

 

நாளை Bournemouth-துக்கு எதிராக, பிரிமியர் லீக் தொடக்க ஆட்டத்தில் களமிறங்குகிறது Liverpool ! 

அண்மையில் Community Shield கிண்ணத்தைத் தவறவிட்ட Liverpool, நாளைய ஆட்டத்தை நல்லதொரு எண்ணத்துடன் தொடங்கும். 

Liverpool - Bournemouth மோதும் ஆட்டத்தை, அதிகாலை மூன்று மணி தொடங்கி, Astro அலைவரிசை 811 மற்றும் சூக்காவில் நேரலையாகக் காணலாம். 

----------  

Chelsea தாக்குதல் ஆட்டக்காரர் Nicolas Jackson-னை ஒப்பந்தம் செய்வது குறித்து, Newcastle United யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது ! 

Jackson-னும் அங்கிருந்து வெளியேறி, Newcastle-லில் இணைய ஆசைப்படுவதாக தெரிகிறது. 

Chelsea அவருக்கு 80 மில்லியன் பவுண்ட் தொகையை நிர்ணயித்துள்ளது. 

--------- 

Crystal Palace-சின் Eberechi Eze-வுக்கு, Tottenham ஒரு பலமான விண்ணப்பத்தை முன்வைத்திருக்கின்றதாம் ! 

அந்த விண்ணப்பம், Palace-சை திருப்தியடை வைத்து, அவரை ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கும் என Spurs நம்புகிறது. 

--------- 

Manchester United-டின் Rasmus Hojlund-னை வளைத்துப்போட Fulham அடிபோட்டு வருகின்றது ! 

AC Milan-னும், அந்த 22 வயதான வீரரை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கின்றதாம். 

---------- 

இப்பருவ Champions லீக் 2 போட்டியில், Selangor FC G குழுவில் இடம் பெற்றுள்ளது ! 

அவ்வணியுடன், கடந்த பருவத்தில் இரண்டாவது இடத்தை வென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த Lion City Sailors, இந்தோனேசியாவின் Persib Bandung, தாய்லாந்தின் Bangkok United ஆகிய அணிகளும் உள்ளன. 

RAAGA Aaha Siranta Isai!