Skip to main content

Advertisement

யுனைடட் தோல்வியுற்றாலும் கவலையில்லை !

யுனைடட் தோல்வியுற்றாலும் கவலையில்லை !

 

Manchester United நிர்வாகி Ruben Amorim தனது வீரர்களைப் பாராட்டியுள்ளார் ! 

நேற்றிரவு Arsenal-லுக்கு எதிரான பிரிமியர் லீக் தொடக்க ஆட்டத்தில், தனது வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்ந்ததாக அமோரிம் கூறினார். 

இப்பருவத்தில், அவர்களிடையே புதிய உத்வேகம் தெளிவாக தெரிகிறது, என்றாரவர். 

யுனைடட்டில் புதிதாக ஒப்பந்தமான Matheus Cunha-வும் Bryan Mbeumo-வும், வேகமும் படைப்பாற்றலும் கொண்ட ஆட்டத்தை வழங்கியதாக அவர் சொன்னார். 

அவ்வாட்டத்தில் யுனைடட் 0-1 என Arsenal-லிடம் வீழ்ந்தாலும், தனது வீரர்களின் ஆட்டத்தரத்தை நினைத்து பெருமிதம் கொள்வதாக அவர் சொன்னார். 

--------- 

இதனிடையே, நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், Leeds United, Everton-னைச் சந்திக்கிறது ! 

2-ஆம் டிவிஷனில் இருந்து இம்முறை EPL-லுக்கு முனேறியுள்ள Leeds, எவர்டனுடன் கடும் சவாலை எதிர்நோக்கும். 

அவ்வாட்டத்தை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811-இல் நேரலையாகக் காணலாம்.

---------- 

Nathan Collins-சை அணியில் தக்க வைத்துக்கொள்வதில், Brentford போராடி வருகிறது !

அவ்வணியின் கேப்டனாகிய அவரை ஒப்பந்தம் செய்யும் போட்டியில், பெரிய பெரிய பிரிமியர் லீக் கிளப்புகள் குதித்திருப்பதே அதற்குக் காரணம். 

---------- 

இன்னும் நிறைய புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து, அணியை பலப்படுத்தும்படி, Bayern Munich-கை அதன் வீரர் Harry Kane கேட்டுக்கொண்டுள்ளார் ! 

மாற்று வீரர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக அவர் சொன்னார். 

நேற்று German சூப்பர் கிண்ண ஆட்டத்தில், Bayern, 2-1 என Stuttgart-டுக்கு எதிராக வெற்றிப்பெற்றதை அடுத்து, அவர் அவ்வாறு சொன்னார். 

RAAGA Aaha Siranta Isai!