
உலகப் பூப்பந்து போட்டிக்குத் தயாராகும் தேசிய வீரர் Ariff Junaidi-க்கு வந்த சோதனை !
Arif உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், அவரும் அவரது இணை Yap Roy King-கும், நேற்று பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை.
அடுத்த வாரம் நடைபெறும் அப்போட்டிக்கு முன்னதாகவே, Ariff குணமடைந்து உடற்தகுதி பெற்றிருப்பார் என தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக, அவர்களின் பயிற்றுநர் தெரிவித்தார்.
--------
Manuel Akanji-யை ஒப்பந்தம் செய்வது குறித்து பேச, Galatasaray, Man City-யை அணுகியிருப்பதாக தெரிகிறது !
ஆட்டக்காரகளை வாங்கும் விற்கும் தவணை முடிவடைவதற்கு முன்பு, அதிகமான ஆட்டக்காரர்களை விற்க வேண்டுமென City நிர்வாகி Pep Guardiola தெரிவித்தார்.
அணியில் அளவுக்கு அதிகமான வீரர்கள் இருப்பதே அதற்குக் காரணம்.
-------------
Christopher Nkunku-வை இரவல் அடிப்படையில் ஒப்பந்தம் செய்ய Bayern Munich அனுப்பிய விண்ணப்பத்தை, Chelsea நிராகரித்துள்ளது !
அவரை நிரந்தரமாக ஒப்பந்தம் செய்ய அனுப்பும் கிளப்பின் விண்ணப்பத்தை மட்டுமே ஏற்றுகொள்ள Chelsea தயாராம்.