Skip to main content

Advertisement

முதல் சுற்றிலேயே வெளியேறினார் Zii Jia !

முதல் சுற்றிலேயே வெளியேறினார் zii jia !

 

நடப்பு EPL வெற்றியாளர் Liverpool, பருவத்தின் வெற்றிகரமான தொடக்கத்தை நீட்டிக்க நாளை காலை Newcastle United-ஐ எதிர்கொள்கின்றது ! 

Jeremie Frimpong, நாளைய ஆட்டத்தில் களமிறக்கபடமாட்டார். 

அவர் காயப் பிரச்சனையால் நீண்ட ஓய்வில் இருப்பதே அதற்குக் காரணம். 

இதனிடையே, Newcastle United-டின் Alexander Isak நாளைக்கான ஆட்டத்தில் முதல் அணியில் சேர்க்கபடவில்லை. 

காரணம், அவர் Liverpool-லுக்கு மாறிச் செல்லவிருப்பதாக, மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  

Newcastle - Liverpool மோதும் ஆட்டத்தை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம். 

---------- 

தேசிய கலப்பு இரட்டையர் Chen Tang Jie–Toh Ee Wei, உலக பூப்பந்து போட்டிக்கு மிகுந்த தயார் நிலையில் இருக்கின்றனர் ! 

அண்மையில் ஆட்டத்தரத்தில் ஏற்பட்ட மந்தத்தை எதிர்கொள்வதற்காக, அவர்களின் பயிற்சியாளர் Nova Widianto எடுத்த மன உறுதி மேம்பாட்டு நடவடிக்கைகள், விளையாட்டு தரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியதாக BAM-இன் பயிற்சி இயக்குநர் Rexy Mainaky தெரிவித்தார். 

இப்பருவத்தில் ஐந்து முறை, அரையிறுதிக்கு முன்னேறிய அவர்கள், இன்று தொடங்கியிருக்கும் உலக பூப்பந்து போட்டியிலும் அதே நிலையை அடைவர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

--------- 

இதனிடையே, ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia உலகப் பூப்பந்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார் ! 

அவர் முதல் சுற்றில், கொரிய வீரரிடம் வீழ்ந்ததே அதற்குக் காரணம். 

அதே சமயம், ஆடவர் இரட்டையர் Arif Junaidi-Yap Roy King, ஜப்பான் ஜோடியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்குச் சென்றனர்.

நாளை மேலும் 3 தேசிய பிரதிநிதிகள், முதல் சுற்றில் களம் காண்கின்றனர்.

உலக பூப்பந்து போட்டியை, இப்போது Astro அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் நேரலையாகக் காணலாம். 

RAAGA Aaha Siranta Isai!