
அடுத்தாண்டு சுக்மா விளையாட்டு போட்டியில், கபடியை சேர்க்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார், மலேசிய கபடி சங்கத்தின் செயலாளர் அருள் பிரகாஷ் !
2008, 2010, 2013, 2022 மற்றும் 2024 ஆண்டுகளில் சுக்மா போட்டிகளில் கபடி இடம்பெற்றிருந்தாலும், 2026-ஆம் ஆண்டுக்கான போட்டியில் அது இடம் பெறவில்லை.
அதற்கு தான், கள வேலைகள் உள்ளிட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ASP-யுமான அருள் பிரகாஷ், ராகா செய்தி பிரிவிடம் பகிர்ந்துகொண்டார்.
அதே வேளை, அடுத்தாண்டு சுக்மாவில் சிலம்பமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக அவர் சொன்னார்.
அதே வேளை, கபடி, சீ விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக கபடி இணைக்கப்பட்டிருப்பது பெரியதொரு வெற்றி, என்றாரவர்.
கபடி, நிறைய நாடுகளில் விளையாடப்பட்டு வருவதால், அது ஒலிம்பிக் போட்டியில் கூட இணைக்கப்பட சாத்தியம் இருக்கிறது, என்றாரவர்.
இவ்வாண்டு இறுதியில், தாய்லாந்தில் நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியில் கபடி சேர்க்கப்பட்டிருப்பது குறித்து கேட்டபோது, அருள் பிரகாஷ் அவ்வாறு கூறினார்
அடுத்தாண்டு சுக்மா, ஆகஸ்டு 15 தொடங்கி, 24-ஆம் தேதி வரை சிலாங்கூரில் நடைபெறுகிறது.
-----------
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, வரலாற்றில் முதன்முறையாக வரும் நவம்பரில் மலேசியாவில் நடைபெறவுள்ளது !
அப்போட்டியை பத்துமலை திருத்தலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாட்டில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், டத்தோ ஸ்ரீ M.சரவணன் தெரிவித்துள்ளார்.
அப்போட்டியில் களமிறக்க ஏதுவான காளை மாடுகள் அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அந்த போட்டிக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.