Skip to main content

Advertisement

ஈராயிரம் சிலம்பம் மாணவர்கள் சுக்மாவுக்கு முயற்சி !

ஈராயிரம் சிலம்பம் மாணவர்கள் சுக்மாவுக்கு முயற்சி !

 

சிலம்பம், அடுத்தாண்டுக்கான சுக்மாவில் இணைக்கப்பட்டிருப்பது, மலேசிய சிலம்பம் வீரர்களுக்கு மிக முக்கியமான முன்னேற்றமாக உள்ளது ! 

சிலம்பம் விளையாட்டில் பத்தாயிரம் மாணவர்கள் இருக்கின்ற வேளை, அதில் குறைந்தது ஈராயிரம் பேர், சுக்மாவில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே தீவிரமாக முயற்சித்து வருவதாக, மலேசிய சிலம்பம் சங்கத்தின் தலைவர் Dr.M.சுரேஸ் தெரிவித்துள்ளார். 

அடுத்ததாக, சிலம்பம் விளையாட்டை, ஆசிய மற்றும் விளையாட்டுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே தனது தலையாய நோக்கம் என அவர் சொன்னார்.

சுக்மா விளையாட்டுப் போட்டி, அடுத்தாண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை, சிலாங்கூரில் நடைபெறவுள்ளது.

------------ 

உலக பூப்பந்து போட்டியில், இன்று 10 தேசிய பிரதிநிதிகள் இரண்டாவது சுற்றில் களமிறங்குகின்றனர் ! 

அதில், நாட்டின் முதல் நிலை ஆடவர் இரட்டையரான Aaron Chia-Soh Wooi Yik-கும் அடங்குவர். 

உலக பூப்பந்து போட்டியை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம். 

--------- 

இதனிடையே, மலேசிய சூப்பர் லீக் ஆட்டத்தில், இன்றிரவு சில அணிகள் மோதுகின்றன !

KL City - PDRM-மைச் சந்திக்கிறது.

சிலாங்கூர் - திரங்கானு FC-யுடன் நேருக்கு நேர் மோதுகிறது.

அவ்வாட்டங்களை, இன்றிரவு Astro-விலும், சூக்காவிலும் நேரலையாகக் கண்டு களிக்கலாம். 

---------- 

மலேசிய காற்பந்து சங்கத்தின் தலைவர் பதவில் இருந்து விலகியுள்ளார், Datuk Joehari Ayub ! 

FAM-மின் துணைத் தலைவர் Datuk Yusoff Mahadi, தற்போது, தற்காலிக தலைவராக உள்ளார். 

RAAGA Aaha Siranta Isai!