Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

artist of the month

S. P. Balasubrahmanyam Is Our Artiste Of The Month!

மயக்கும் குரலின் சொந்தக்காரர் எஸ்.பி.பி.
08 Sep 2020, 07:00 AM
  • Share on Whatsapp
  • Share on Line

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராகவும் நடிகராகவும் உலா வருபவர். 1996ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் அறிமுகமாகிய இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

 s. p. balasubrahmanyam is our artiste of the month!

பாடும் நிலா எஸ்.பி.பியைப் பற்றிய சுவையான சிறு குறிப்புகள்:

  • இவருடைய தாய்மொழி தெலுங்கு. இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது.
  • முதன் முதலாக எஸ்.பி.பி திரைப் பாடலாகப் பாடிய “சாந்தி நிலையம்” படத்திற்காக ‘இயற்கை எனும் இளைய கன்னி’ எனும் பாடல்தான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது ‘அடிமைப் பெண்’ படப் பாடலான ‘ஆயிரம் நிலவே வா’.

 s. p. balasubrahmanyam is our artiste of the month!

  • தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ்.பி.பி, எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன.
  • நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
  • ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். மின்சாரக்கனவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தங்கத் தாரகை மகளே’ எனும் பாடலுக்காக அவர் தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்பட பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே.
  • “ஏக் துஜே கேலியே” பட வெற்றிக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்களைப் பதிவு செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தவர்.
  • இவர் பாடகர் மட்டுமல்ல சில படங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
  • மூச்சுவிடாமல், “கேளடி கண்மணி”-இல் ‘மண்ணில் இந்தக் காதல்’, “அமர்க்களம்” பட ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என எஸ்.பி.பி பாடிய பாடல்கள் மிகப் பெரிதாகப் பேசப் பெற்றவை.

 s. p. balasubrahmanyam is our artiste of the month!

  • எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும், இசைஞானி இளையராஜாவிற்குமான நட்பு 50 வருடங்களைக் கடந்தது. எஸ்.பி.பி. தமிழ்த் திரையுலகில் பாட வந்தது முதலே இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களுடன் மிக நெருங்கிய நட்பிலிருந்து வந்தார். “இளையராஜா மாதிரி இசையமைக்க ஆளே இல்லை. அவருக்கு எத்தனை முறை தேசிய விருதுகள் கொடுத்தாலும் தகும்” என்றார் எஸ்.பி.பி.

 s. p. balasubrahmanyam is our artiste of the month!

அரை நூற்றாண்டுகள், ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள், உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளுக்கும் இசைப்பயணம் என சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் ராகாவில் இம்மாத சிறப்பு கலைஞராக உலா வருகிறார்.

Filled Under :


*We reserve the right to delete comments that contain inappropriate content.

Related

  • {{related.category}}

    {{related.name}}

     {{related.DocumentPublishFrom | date:"dd MMMM yyyy h:mma"}}