
Image via New Indian Express
Advertisement
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றாலே “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற தத்துவத்தை நம் முன்னோர்கள் விதைத்துச் சென்றுள்ளனர்.
பழங்காலத்தில் போகி பண்டிகையன்று விடியற்காலையில் எழுந்து பழைய பாய், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த பானைகள் போன்றவற்றை வீட்டின் அருகில் தீயிட்டு கொளுத்துவது வழக்கம். இன்று, சிலர் காற்று மாசுபடும் என்பதால்
பொருட்களை எறிக்காமல் குப்பைத் தொட்டியில் வீசுவது உண்டு. ஆனால், அன்று பிளாஸ்டிக் பயன்பாடு குறைவு. பழைய வீட்டு ஓலைகள் போன்ற உளர் தாவர பொருட்களை தான் தீயிட்டுக் கொளுத்தினர்.

Image via Wikimedia
மன ரீதியாகப் பார்த்தால் போகிக்குள் வேறு சில தத்துவங்களும் ஒளிந்துள்ளன. நம்முடைய மனதில் இருக்கும் பல கவலைகளையும், வெறுப்பு, பொறாமை என பல தீய எண்ணங்களையும் வைத்துக்கொண்டு வாழ்கிறோம். இவை அனைத்தையும் நம்முடைய மனதில் இருந்து எரித்துவிட்டு பொங்கல் முதல் புதிய மனிதனாக வாழவேண்டும் என்ற அற்புத தத்துவத்தையும் போகி உணர்த்துகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி” என்றனர். அச்சொல் நாளடைவில் மருவி “போகி” என்றாகிவிட்டது.