Skip to main content

Advertisement

Entertainment

தமிழ் – ஆங்கில பழமொழிகள்

Main image via 123RF

அன்றாட வாழ்விலும், பலரது வாய்மொழியிலும் இடம் பெற்று உயிர்ப்புடன் விளங்குவது பழமொழி. ஒரு நாட்டின் உண்மையான வாழ்க்கைநெறி, நாகரிகம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனை வளம், ஆகிய பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவது பழமொழி (proverb). தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தால் உணர்ந்த உண்மைகளை உலகத்தோர் உணரும் பொருட்டு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் விதத்தில் உதிர்த்த வாய் மொழிகள் பழமொழியாகும். தமிழிலுள்ள சில பழமொழிகளையும் அதற்கு இணையான ஆங்கில பழமொழிகளையும் காண்போம்.

  • அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி

Advertisement

As is the king, so are the subjects

ஒரு குடும்பத்தில் அல்லது ஓர் அணியில் உள்ளவர்களின் பண்பு நலன்கள் அந்தக் குடும்ப/அணி தலைவரைச் சார்ந்துள்ளது.

via GIPHY

 

  • அன்பான நண்பனை ஆபத்தில் அறி

A friend in need is a friend indeed

நமக்கு நேரிட்ட ஆபத்தில் தன்னுயிரையும் பெரிதாக மதிக்காமல் வந்து உதவி, நம்மை ஆபத்திலிருந்து காப்பவனே உண்மையான நண்பன். ஒருவன் நல்ல நண்பன் என்பதை அவன் நமக்குத் தகுந்த நேரத்தில் வந்து உதவுவதிலிருந்து கண்டுகொள்ளலாம்.

via GIFER

  • ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

Killing two birds with one stone

ஒரே செயலில் இரண்டு விஷயங்களை அடைவதில் வெற்றி பெறுவது

via GIFER

  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Health is wealth

நம் ஆரோக்கியத்தை விட பெரிய செல்வம் எதுவும் இல்லை. 

தமிழ் – ஆங்கில பழமொழிகள்

  • பேராசை பெரு நஷ்டம்

Grasp all, lose all

எல்லாமே வேண்டும் என்று பேராசை கொள்பவன் தன்னிடம் இருப்பது அனைத்தையும் இழக்க நேரிடும்.

via GIPHY

Related Article

RAAGA Aaha Siranta Isai!