Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

hot stuff

மேன்மைக்கான மென் திறன்கள்

மென் திறன்கள் பற்றிய தகவல்கள்
Editor
27 Jul 2020, 07:00 AM

வாழ்க்கையில் தெளிவான திட்டமிட்ட குறிக்கோளுடன், முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால், சாதாரண மனிதரும் சரித்திரம் படைக்க முடியும். பட்டமும், சான்றுகளும் அவசியம்தான் என்றாலும் அத்துடன் மென்திறன் எனப்படும் (soft skills) சேர்ந்திருக்கும் போதுதான் ஒரு சக்தி வாய்ந்த பணித்திறன் உருவாகிறது. மென்திறன் என்பது ஒரு மனிதனிடம் உள்ள தனிப்பட்ட பழக்க வழக்க அடிப்படையிலான திறமை அல்லது ஆற்றலாகும்; சுயமாக வளர்த்துக்கொள்ளும் ஒன்று.

இந்த வாரம் ராகாவிலும் திறன்களைப் பற்றி பல பயனுள்ள தகவல்களை கலக்கல் காலை நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொண்டனர். திறன்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தியுடையவை என்பதையும் MySkills Foundation மாணவர்கள் மூலம் அறிந்து கொண்டோம்.

இன்றைய உலகில் அனைத்திற்குமே போட்டிகள் அதிகமாகிவிட்ட சூழலில், ஒருவர் தனது திறன்களை முடிந்தளவு அதிகப்படுத்திக் கொள்வதே வெற்றிக்கு வழிவகுக்கும். மேன்மைக்கான சில மென் திறன்கள் உங்களுக்காக:

  1. தகவல் பரிமாற்றம்

சரியான வார்த்தைகளைக் கொண்டு சரியான நேரத்தில், சரியான விதத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய வேண்டும்.

via GIPHY

  1. படைப்பாற்றல் திறன்

ஒரு விஷயத்தை தொகுத்து வழங்கும் போது சரியான திட்டமிடலுடன் தகவல்களை நன்றாக தயாரித்து, தெளிவாக பிறருக்கு வழங்க வேண்டும்.

via GIPHY

  1. குழுவாக பணிபுரிதல்

ஓர் இலக்கை அடைவதற்கு, குழுவில் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, தனி நபர் விருப்பு வெறுப்புகளைக் கடந்து, ஒரே அணியாக பணிபுரியும் திறன் அவசியம்.

via GIPHY

  1. நேர நிர்வாகம்

குறிப்பிட்ட கால அளவிற்குள், நேரத்தைச் சரியாக பயன்படுத்தி கொடுத்த பணியை முடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வேலையினால் ஏற்படும் பளுவையும், மன உளைச்சலையும் நன்றாக கையாள கற்றுக் கொள்ள வேண்டும்.

via GIPHY

  1. சிக்கலான நேரங்களில் முடிவெடுக்கும் திறன்

சிக்கலை களைவதற்கு ஆய்வு செய்தல், கிடைக்கக்கூடிய வளங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தி சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவை முக்கியமானதாகும்.

via GIPHY

இது போன்ற மென் திறன்களைப் பழகுவதன் மூலம் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். தொழில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் முன்னேற்றம் காண முடியும்.

 

 

Filled Under :


*We reserve the right to delete comments that contain inappropriate content.

Related

  • {{related.category}}

    {{related.name}}

     {{related.DocumentPublishFrom | date:"dd MMMM yyyy h:mma"}}