ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உங்கள் இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். நம் உயிர் நாடியாக விளங்கும் இதயத்தை பாதுகாக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வது அவசியம். அத்தகைய சில உணவுப் பொருட்களை இங்கு காண்போம்:
- பச்சை காய்கறிகள்
Advertisement
பசலை போன்ற பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கின்றன. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
- பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களை சாப்பிட்டால் இதிலுள்ள சத்துகள் இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்புகளை நீக்கி, கல்லீரலுக்கு அனுப்பி விடுகிறது, இதனால் இதயம் அடைப்பு ஏற்படுபதை தடுக்கிறது.
- பாதாம் பருப்பு
பாதாம் பருப்பில் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் இரண்டு முக்கியமான ஊட்டச்சத்துகளான ஒற்றைநிறைவுறா கொழுப்பு (monosaturated fat) மற்றும் நார்ச்சத்துகளின் நல்ல மூலமாகும்.
- மீன்கள்
மீன்களில் குறிப்பாக சால்மன் மீனில் ஒமேகா 3 உள்ளது. எனவே, வாரம் ஒரு முறை இந்த சால்மன் மீன் சாப்பிடுவதால், நம் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து, ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
- தக்காளி
தக்காளியில் வைட்டமின் A, C மற்றும் லைகோபீன், ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற சத்துகள் அதிகமாக உள்ளது. எனவே தக்காளியை தினமும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் இதயம் வலிமையாக இருக்கும்.
உணவுகள் மட்டுமின்றி உடற்பயிற்சி, அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்வது, உடல் எடையை சீராகப் பராமரிப்பது போன்ற இதர கூறுகளையும் கருத்தில் கொள்வது அவசியம். இவை அனைத்தையும் தாண்டி மன ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்தைக் காக்கும்.