Skip to main content

Advertisement

Entertainment

RAAGAவின் மக்களுக்கு மக்கள்

உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவது நம் அனைவரின் கடமையாகும். ‘அறம் செய்ய விரும்பு’ என்று அன்றே ஔவையாரும் கூறியுள்ளார். வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இல்லாதவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவும் நோக்கில் ‘ராகாவின் மக்களுக்கு மக்கள்’.

raagaவின் மக்களுக்கு மக்கள்

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாரும் கஷ்டத்தில் இருந்தால், அவர்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதற்கான நேரம் இது தான். அவர்களுக்கு உதவி செய்யும் நிலமை உங்களுக்கு இல்லை என்றால் உதவி செய்யக் கூடியவர்களுக்கு அவர்களின் கஷ்டங்களை எடுத்துச் சொல்ல உங்களுக்கான ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கிக் கொடுக்கிறோம்.

Advertisement

 வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றவர்கள் அல்லது கொரோனா நெருக்கடியினால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு உதவ அல்லது ஆதரவு அளிக்க உங்களின் உதவி எங்களுக்குத் தேவை. உதவி தேவைப்படுபவர்களின் பெயர்களை raaga.my-இல் நீங்கள் பரிந்துரைக்கலாம்.

raagaவின் மக்களுக்கு மக்கள்

அதேபோல், நன்கொடையாளர்களும் தன்னார்வலர்களும் இந்த மக்களுக்கு கை கொடுக்க முன்வர ஊக்குவிக்கப்படுகின்றனர். நீங்கள் இவர்களுக்கு உதவ தயாராக இருந்தால், உங்களின் பெயர்களையும் raaga.my-இல் பதிந்து கொள்ளலாம்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். நாம் அனைவரும் கைகோர்த்து மேற்கொள்ளும் சிறு சிறு உதவிகள் தேவைப்படுபவர்களின் நெருக்கடியினைக் களைவதற்கு நிச்சயம் உதவ முடியும். மற்றவர்களை உயர்த்தி நாமும் உயர்வோம்! அன்பும் அக்கறையுடன் RAAGA. #இதுவும் கடந்து போகும்.

raagaவின் மக்களுக்கு மக்கள்

Related Article

RAAGA Aaha Siranta Isai!