Skip to main content

Advertisement

Entertainment

ராகாவின் ஐடலுக்கான தேடல்

ஆர்வமும் திறமையும் உள்ள பலர் சரியான வாய்ப்பின்றி வெற்றியைத் தவறவிடுவதுண்டு. இசை துறையில் ஆர்வமும் திறமையும் உள்ள மலேசியர்களுக்காகப் பிரத்தியேகமான ஒரு பாடல் திறன் போட்டி ஹரா ஒர்கனிக் வழங்கும் ராகாவின் ஐடல். உங்களுக்குப் பாட்டு பாடுவதில் ஆர்வமும் திறமையும் இருந்தால் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

raaga.my-இல் வழங்கப்பட்டிருக்கும் பாடல் பட்டியலில் ஒன்றை தேர்வு செய்து, அதனை பாடி 1 நிமிட காணொலியாக பதிவு செய்யுங்கள். ஆகஸ்ட் 21-க்குள் அந்தக் காணொலியை படவரியில் (Instagram) #RAAGAIDOL என்ற ஹேஷ்டேக்கோடு பதிவேற்றம் செய்ய வேண்டும். மறக்காமல் RAAGA-வை குறியிட (tag) வேண்டும்.

Advertisement

அதிக வாக்குகள் பெறும் சிறந்த 5 போட்டியாளர்கள் வருகின்ற செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் இறுதி சுற்றில் களம் இறங்குவார்கள். அதில் அதிக மதிப்பெண்கள் பெறும் சிறந்த மூன்று போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். முதல் நிலை வெற்றியாளருக்கு ரிம 2,000, இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு ரிம 1,000 மற்றும் மூன்றாம் வெற்றியாளருக்கு ரிம 500 வெல்லும் வாய்ப்பு காத்திருக்கிறது! அதுமட்டுமல்லாமல், பிரபலமான உள்ளூர் இசையமைப்பாளருடன் ஒரு பாடலைப் பதிவு செய்யும் அரிய வாய்ப்பும் இவர்கள் மூவருக்கும் கிடைக்கும்.

ராகாவின் ஐடலுக்கான தேடலில் நீங்களும் பங்கு கொள்ள விரும்பினால் உடனே முற்படுங்கள்!

Related Article

RAAGA Aaha Siranta Isai!