2021 ஆண்டிலாவது கொரோனாவிற்கு ஒரு மருந்து கண்டிப்பிடிக்கப்படுமா? மக்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கும்? புதிய ஆண்டிலாவது நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்குமா? வரும் ஆண்டிலாவது திருமணம் நடைபெறுமா என்று 90 கிட்ஸ் ஆதங்கத்தோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை தருகிறது 2021 புத்தாண்டு ராசி பலன். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்த ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் புத்தாண்டு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
Advertisement
மனித நேயம் மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்குச் சுக வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்; சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வருடம் பிறக்கும்போது சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும். வேலை தேடும் அன்பர்களுக்கு நல்ல வேலை அமையும். கூட்டுத் தொழில் பேச்சில் கவனம் தேவை. எவருக்கும் கடன் தர வேண்டாம். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உழைப்பால் உங்களை உயரவைப்பதாக அமையும்.

ரிஷபம்
இன்சொல்லால் அனைவரையும் மகிழ்விப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் கல்யாண முயற்சிகள் கைகூடும். வீடு கட்ட வங்கி கடன் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாகவும், அடிப்படை வசதி வாய்ப்புகலை பெருக்கி சமூகத்தில் அந்தஸ்தை தருவதாகவும் அமையும்.

மிதுனம்
லட்சியவாதி நீங்கள். உங்களுக்கு 2-வது ராசியில் புத்தாண்டு பிறக்கிறது. எதிர்பார்த்த தொகை வந்து சேரும். குடுமத்தில் அமைதி பிறக்கும். தடைப்பட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். வாகனத்தை இயக்கும்போது அலைப்பேசியைத் தவிர்ப்பது நல்லது. தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். பணவரவு திருப்தி தரும். மொத்தத்தில் இந்த ஆண்டு புதிய அத்தியாத்தைப் படைக்கச் செய்வதாக அமையும்.

கடகம்
பொறுமையால் சாதிப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் சுக்ரன் நிற்கும்போது 2021 புத்தாண்டு பிறப்பதால், எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். கனிவான பேச்சால் காரியம் முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவர் வழியில் பிணக்குகள் நீங்கும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்குக் கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும். ஆரோக்கியத்தில் அக்கரை காட்டுங்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிறந்த அனுபவங்களைத் தருவதாக அமையும்.

சிம்மம்
இரக்கம் மிகுந்தவர் நீங்கள். உங்களுக்குக் சுக ஸ்தானத்தில் சுக்ரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வீடு கட்டும் பணி விரைந்து முடியும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். உங்களின் தனித்திறமையை அதிகப்படுத்துவீர்கள். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலாமக நடக்கும். திடீர்ப் பயணங்களும், வீண் செலவுகளும் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களைச் சாதிக்கவைப்பதாக அமையும்.

கன்னி
உண்மையை விரும்புபவர் நீங்கள். இந்தப் புத்தாண்டில் உங்களின் திட்டங்கள் பூர்த்தியாகும். பொறுப்புகள் தேடி வரும். மூத்த சகோதர சகோதிரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கும். வேலை தேடுவோருக்கு நல்ல வேலை அமையும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு உங்களின் பொறுப்பை உணர்த்துவதாக அமையும்.

துலாம்
இறைப் பக்தி மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப் பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். நீங்களும் கடனை அடைப்பீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வீர்கள். பணவரவு உண்டு. பதவி உயரும். தடைப் பட்டிருந்த காரியங்கள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக் கூடும். உணவு, வாகனப் பயணத்தில் அதீத கவனம் தேவை. மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்கள் அந்தஸ்தை உயர்த்துவதாக அமையும்.

விருச்சிகம்
புரிந்து கொண்ட நண்பர்களுக்குப் பக்க பலமாக இருப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-வது ராசியில் 2021 புத்தாண்டு பிறக்கிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணப்புழக்கமும், உங்களின் ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். சிக்கனம் அவசியம். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, தடைகளை நீக்கி உங்களுக்கு முன்னேற்றம் தருவதாக அமையும்.

தனுசு
பாசமும் நேசமும் நிறைந்தவர் நீங்கள். உங்களுக்குச் சுக்ரன் சாதகமாக இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் தைரியம் பிறக்கும். பிரச்னைகளைச் சமாளிக்கும் வல்லமை உண்டாகும். பணப் பற்றாக்குறை வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு புது வேலை கிடைக்கும். எவருக்கும் பணம் வாங்கித் தரவோ, பொறுப்பேற்கவோ வேண்டாம். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் பணவரவைத் தருவதாக அமையும்.

மகரம்
பொறுமையால் சாதிப்பவர் நீங்கள். உங்களுக்கு லாப வீட்டில் சுக்ரன் அமர்ந்துள்ள நேரத்தில் 2021 புத்தாண்டு பிறக்கிறது. திட்ட மிட்ட காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு புதிய வெற்றி களைத் தரும் விதமாக அமையும்.

கும்பம்
கடினமான அனுபவங்களையும் படிப்பினையாக ஏற்றுக்கொள்ளும் பண்பாளர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். பணவரவு ஓரளவு இருக்கும். பதவி – சம்பள உயர்வு கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு திடீர் திருப்பங்கள் தருவதாக அமையும்.

மீனம்
தர்மம் நம்மையும் வம்சத்தையும் காப்பாற்றும் என்ற நம்பிக்கைக் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சுக்ரன் வலுவாக நிற்கும் நேரத்தில் 2021 புத்தாண்டு பிறப்பதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். வீடு கட்ட பல வழிகளில் உதவிகள் கிடைக்கும். எவரையும் நம்பி பெரிய தொகையைக் கடனாகத் தர வேண்டாம். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்கள் நிலையைத் தக்கவைக்கக் கற்றுத் தருவதாக அமையும்.
2021 புத்தாண்டு, “கடந்த ஆண்டவை விட இந்த ஆண்டு பரவாயில்லை” எனும் சொல்லும் அளவுக்கு அமையும் என எதிர்ப்பார்ப்போம். ஜோதிட கணிப்புகள் ஒரு புறம் இருந்தாலும் தன் கையே தனக்கு உதவி என்பதை கருத்தில் கொண்டு உழைப்போம், உயர்வோம்!
சக்தி விகடனிலிருந்து சில மாற்றங்களுடன்