கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் காலமானார்.

1996ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் அறிமுகமாகிய இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் மனதை மயக்கும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
Advertisement

காலமெல்லாம் கானம் பாடி நம்மை மகிழ்வித்த பாடும் நிலா எஸ்.பி.பி இன்று உடலால் நம்மை பிரிந்துள்ளார். அவரின் 40,000 பாடல்கள் இருக்கும்வரை, அவர் பல தலைமுறைகள் தாண்டி நம்மோடு வாழ்ந்து கொண்டே இருப்பார்.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர் தம் குடும்பத்தினருக்கு ராகாவின் ஆழ்ந்த அனுதாபங்கள்.