Skip to main content

Advertisement

Entertainment

பிலவ வருடம் 2021

பிலவ வருடம் 2021

புத்தாண்டு என்றாலே எல்லோர் மனதிற்குள் உற்சாகமும், சந்தோஷமும் பொங்கி எழும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஏப்ரல் 14-ஆம் தேதி, சித்திரை முதல் நாள் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி மலேசிய முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

அதே சமயம், மலையாள மக்கள் விஷு என்றும், சீக்கிய மக்கள் வைஷாகி என்றும் தத்தம் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.  பிறக்கும் இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த ஆண்டாக அமையட்டும்.

பிலவ வருடம் 2021

புத்தாண்டு அன்று கோவிலுக்குச் செல்வதும், இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதும், அறுசுவை உணவுகளைச் சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்வதும் நமது வழக்கமாகும். கோவிட் 19-லிருந்து நாம் இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், இந்த ஆண்டும் வீட்டிலேயே பாதுகாப்பான மிதமான கொண்டாட்டத்தை மேற்கொள்வோம்.

மலரும் இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பம் சேரும், மகிழ்ச்சி பொங்கும் என எதிர்பார்ப்போம்! அனைவருக்கும் ராகாவின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

Related Article

RAAGA Aaha Siranta Isai!