Skip to main content

Advertisement

Entertainment

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணிவிழாவை முன்னிட்டு, ராகா பண்பலையோடு இணைந்து  நடத்தும் குறுங்கதைப் போட்டி. 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணிவிழாவை முன்னிட்டு, ராகா பண்பலையோடு இணைந்து  நடத்தும் குறுங்கதைப் போட்டி. 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணிவிழாவை முன்னிட்டு, ராகா பண்பலையோடு இணைந்து  நடத்தும் குறுங்கதைப் போட்டி. 

 

Advertisement

இளைஞர்களை இலக்கியத்தின்பால் ஈர்க்கவும் அவர்களின் படைப்பாற்றலை வளர்க்க களம் அமைத்துக் கொடுத்துக் கொடுக்கும் நோக்குடன் ராகா பண்பலையுடன் இணைந்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் குறுங்கதை எழுதும் போட்டியை நடத்துவதாக  எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் கூறினார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு 60  ஆண்டை எட்டுவதால் இவ்வாண்டு மணிவிழா கொண்டாடப்படவிருக்கிறது. அதனை முன்னிட்டு சில இலக்கியப் போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மின்னல் பண்பலையுடன் இணைந்து தேசிய அளவில் சிறுகதைப் போட்டியை நடத்தி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

அடுத்து குறுங்கதைப் போட்டியை ராகா பண்பலையுடன் இணைந்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்துகிறது..இப்போட்டிக்கான கதைகளை  28.2.2022ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றார் இராஜேந்திரன்

25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் இப்போட்டி கட்டமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை இலக்கியத்தின்பால் ஈர்க்கும் நோக்கம்தான் அதற்கு காரணம்.

மாணவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை சங்கம் மேற்கொண்டு வருகிறது.  இந்தப் போட்டி இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். 25 வயதுக்குட்பட்ட  மாணவர்களும் போட்டியில் பங்கெடுக்க  அழைப்பதாகவும் இராஜேந்திரன் சொன்னார். 

இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டவும் விதிமுறைகளை விளக்கவும் 28.1.2022ஆம் தேதி இயங்கலையில் பயிலரங்கம் ஒன்று நடத்தப்படவிருக்கிறது. 

ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொண்டால், அவர்களை உள்ளடக்கி புலனக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, கருத்து பரிமாற்றமும் செய்யப்படும். ஆர்வமுள்ளவர்கள் 013 3609989 அல்லது 0177008189, 010 2147399 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

போட்டி பற்றிய மேல் விபரங்களுக்கு, raaga.my-ஐ நாடுங்கள்!

Related Article

RAAGA Aaha Siranta Isai!